தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை-பொம்மிடியை சேர்ந்தவர்

தனியார் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து பொம்மிடியை சேர்ந்த கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-05-21 23:06 GMT
ஆட்டையாம்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பொம்மிடியை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 67). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதைத்தொடர்ந்து கடந்த 17-ந் தேதி கொரோனாவுக்கு சிகிச்சை பெற சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதே நேரத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டதால், கோவிந்தன் மனவேதனை அடைந்தார். இதனால் மருத்துவமனையின் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஆட்டையாம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றினர். தொடர்ந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தனர். இந்த சம்பவம் குறித்து ஆட்டையாம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்