கேனில் டீ விற்ற 13 பேர் மீது வழக்கு

கேனில் டீ விற்ற 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தார்கள்.

Update: 2021-05-21 20:42 GMT
கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் வசந்தகுமார் மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அரசு ஆஸ்பத்திரி எதிரில், பஸ் நிலையம், தினசரி மார்க்கெட், பாரியூர் நஞ்சகவுண்டன் பாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி கேனில் வைத்து டீ விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து டீ கேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக 13 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்