பட்டாசு வியாபாரி வீட்டில் 9 பவுன் நகை திருட்டு

சிவகாசியில் பட்டாசு வியாபாரி வீட்டில் 9 பவுன் நகையை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2021-05-21 19:59 GMT
சிவகாசி, 
சிவகாசி விஸ்வநத்தம் பெரியார்நகரில் வசித்து வருபவர் முத்துராமலிங்கம் (வயது 50). இவர் சிவகாசியில் பட்டாசு வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சுரண்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் சிகிச்சைக்காக தனது மனைவி பத்மாவுடன் புறப்பட்டார். 
அப்போது பத்மா பீரோவில் இருந்த தங்கசங்க லியை எடுத்து போட்டு சென்றார். பின்னர் பீரோவை பூட்டிவிட்டு சாவியை பீரோவின் மேல் வைத்து விட்டு சென்றார். 
வீட்டில் மகள் அனிதா மட்டும் இருந்தார். இந்த நிலையில் மாலையில் வீடுதிரும்பியவுடன் அந்த நகையை கழற்றி பீரோவில் முத்து ராமலிங்கம் வைக்கும்போது அதில் ஏற்கனவே வைத்திருந்த 9 பவுன் நகைகள் காணாமல் போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் முத்துராமலிங்கம் மகள் அனிதா தனது தோழி வீட்டிற்கு சென்ற போது யாரோ மர்ம ஆசாமி வீட்டிற்குள் புகுந்து பீரோவை திறந்து நகைகளை திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்