சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9¾ லட்சம் தங்கம் பறிமுதல்
சார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.9¾ லட்சம் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது.
செம்பட்டு,
சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று திருச்சி வந்தது. இந்தவிமானத்தில் வந்த பயணிகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பயணி ஒருவர் எடுத்துவந்த கைப்பையை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் ஒரு சுத்தியல் இருந்தது. அந்த சுத்தியலை சோதனை செய்ததில், அதில் 200 கிராம் தங்கம் மறைத்து கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தங்கத்ைத பறிமுதல் செய்த அதிகாரிகள் அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.9¾ லட்சம் ஆகும்.