குரூப்-2 தேர்வுகளுக்கு, இணையவழி இலவச பயிற்சி
அரியலூரில் குரூப்-2 தேர்வுகளுக்கு, இணையவழி இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு மத்திய- மாநில அரசு பணிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள குரூப் 2, 2 ஏ காலி பணியிடங்களுக்கான தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு கொரோனா தொற்று காரணமாக நேற்று முன்தினம் முதல் இணையவழி மூலம் நடைபெற்று வருகிறது. இலவச பயிற்சி வகுப்பில் சேருவதற்கு விருப்பமுள்ள அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தினை 04329-228641 என்ற தொலைபேசி எண்ணிலும், 9499055914 என்ற செல்போன் எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.