மேலும் 283 பேருக்கு தொற்று
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 283 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 283 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 8,759 ஆக உயர்ந்துள்ளது. இதில் 64 பேர் ஏற்கனவே உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் இருந்து கொரோனாவுக்கு 6,789 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,906 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.