கொரோனாவுக்கு மேலும் 13 ேபர் பலி
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு ஒரேநாளில் 13 பேர் பலியாகினர்.
விருதுநகர்,
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 850 பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 29,140 ஆக உயர்ந்துள்ளது. 24,029 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 4,794 பேர்அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுவதோடு, வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புக்கு இதுவரை இல்லாத அளவில் 13 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 318 ஆக உயர்ந்துள்ளது.