ஆதனக்கோட்டை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு

ஆதனக்கோட்டை பகுதியில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

Update: 2021-05-21 18:17 GMT
ஆதனக்கோட்டை, பிப்.22-
ஆதனக்கோட்டை மின்வாரிய நிலையத்தில் இருந்து ஆதனக்கோட்டை, கல்லுக்காரன்பட்டி, வண்ணாரப்பட்டி, கணபதிபுரம், தொண்டைமான்ஊரணி, வளவம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களாக அந்த மின் பாதையில் அடிக்கடி  மின்பழுது ஏற்பட்டு வருகிறது.  காற்றடித்தாலோ, மழை பெய்தாலோ அன்று இரவு முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மறுநாள் காலையில் தான் மின்சாரம் வினியோகிக்கப்படும் என அப்பகுதி  மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நேற்று முன்தினம் மாலையில் காற்றுடன் பெய்த கன மழையால் இப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. அதன்பின் நேற்று  காலையில்தான் மின்சாரம் வந்தது. இதனால் இரவு நேரங்களில் இப்பகுதி மக்கள் மிகுந்த சிரமம் அடைந்தனர். எனவே இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்