பொள்ளாச்சி போத்தனூர் ரெயில் பாதையில் மின்மயமாக்கல் பணி அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி போத்தனூர் இடையே ரெயில் பாதையில் நடந்த மின் மயமாக்கல் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி-போத்தனூர் இடையே ரெயில் பாதையில் நடந்த மின் மயமாக்கல் பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அதிகாரிகள் ஆய்வு
பொள்ளாச்சி-போத்தனூர் இடையே ரெயில் பாதையில் மின் மயமாக்கல் பணிக்கு மின் கம்பங்கள்நடப்பட்டு கம்பிகள் அமைக்கும் பணிகளும் நிறைவு பெற்று உள்ளன.
இந்த நிலையில் மின் கம்பிகள் சரியாக இணைக்கப்பட்டு உள்ளதா? என்பது குறித்து நவீன எந்திரம் மூலம் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து ரெயில்வே அதிகாரிகள் கூறியதாவது:-
903 மின் கம்பங்கள்
பொள்ளாச்சி -போத்தனூர் இடையே 41 கிலோ மீட்டர் தூரத்திற்கு 903 மின் கம்பங்கள் நடப்பட்டு உள்ளன. மின் கம்பங்களுக்கு இடையே மின்சார கம்பிகள் அமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளது.
கிணத்துக்கடவு, செட்டிப்பாளையத்தில் 2 சுவிட்ச் நிலையங்கள் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் மின் கம்பங்களுக்கு இடையே இணைக்கப்பட்டு உள்ள மின் கம்பிகள் நேராக உள்ளதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அனைத்து பணிகளும் முழுமையாக முடிந்த பிறகு ரெயில்வே பாதுகாப்பு உயர் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்வார்கள். அதன்பிறகே ரெயில்கள் இயக்குவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.