புதிதாக 423 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-05-21 17:57 GMT
புதுக்கோட்டை, மே.22-
புதுக்கோட்டை மாவட்டத்தில் புதிதாக 423 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் ஒருவர் பலியானார்.
தொற்று அதிகரிப்பு
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா 2-வது அலையில் தினமும் தொற்று எண்ணிக்கை அதிகரித்தப்படி உள்ளது. அரசின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட பட்டியலில் 423 பேருக்கு தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்து 154 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 111 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 988 ஆக அதிகரித்துள்ளது.
ஒருவர் சாவு
கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் தற்போது 2 ஆயிரத்து 983 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த 54 வயது ஆண் ஒருவர் திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்தார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்