கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி
கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொள்ளாச்சி
கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளில் வீடு, வீடாக சென்று கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கொரோனா பரவல்
பொள்ளாச்சி பகுதிகளில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் நகர்புறங்களை விட, கிராமப்புறங்களில் அதிகமாக காணப்படுகிறது. தெற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட 26 ஊராட்சிகளில் எந்த ஊராட்சியை யும் கொரோனா விட்டு வைக்கவில்லை. சில ஊராட்சிகளில் ஒரு சிலருக்கு மட்டும் தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையில் நகர்புறத்தையொட்டி உள்ள கிராமங்களில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் ஒன்றியத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள கிராமங்களை கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
வீடு வீடாக கணக்கெடுப்பு
மேலும் வீடு, வீடாக சென்று வீட்டில் யாருக்காவது காய்ச்சல், இருமல் போன்ற தொந்தரவு உள்ளதா? வேறு ஏதாவது நோய் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக அந்தந்த ஊராட்சி செயலாளர்கள் மற்றும் கணக்கெடுப்பா ளர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் பாலசுப்பிரமணியம், செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-
பாதிப்பு அதிகம்
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்தில் உள்ள சின்னாம்பாளையம், மாக்கி னாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கோலார்பட்டி, நாயக்கன்பாளையம், சோலபாளையம், ஜமீன்கோட்டாம்பட்டி, வக்கம்பாளையம், சீலக்காம்பட்டி, எஸ்.நல்லூர் ஊராட்சிகளில் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்த ஊராட்சிகளில் வீடு, வீடாக சென்று வீட்டு முகவரி, வசிப்பவர் களின் பெயர்கள், தொலைபேசி எண், வயது, தொழில் அல்லது எங்கு வேலை செய்கிறார்கள் என்பது குறித்த விவரங்கள், உடல் வெப்பநிலை, கர்ப்பிணிகள், பிரசவித்த தாய்மார்கள், காய்ச்சல், இருமல், மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட அறிகுறிகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டு வருகிறது.
காய்ச்சல் பரிசோதனை முகாம்
மேலும் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இதய நோய், சிறுநீரக பிரச்சினை, புற்றுநோய், சுவாச நோய் உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளதா? என்றும், சமீபத்தில் வெளியூர் சென்று வந்தார்களா? என்பது குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.
மேற்கண்ட பகுதிகளில் 4051 வீடுகளில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு உள்ளது.
கணக்கெடுப்பு குறித்த விவரங்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த விவரத்தை வைத்து காய்ச்சல் பரிசோதனை முகாம் நடத்தி, தொற்று பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.