ஊரடங்கு விதிமீறிய 29 பேர் மீது வழக்கு
இளையான்குடி பகுதியில் ஊரடங்கு விதிமீறிய 29 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இளையான்குடி,
தற்போது கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் அரசு விதிக்கும் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தேவையின்றி வெளியே வாகனங்களில் சுற்றக்கூடாது. தேவையின்றி சுற்றி திரிந்தவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு உள்ளது. மீறி தொடர்ந்து சுற்றி திரிந்தால் அபராத தொகை விதிக்கப்படும்.
எனவே பொதுமக்கள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தினர்.