எஸ்.புதூர் அருகே மணியாரம்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உலகம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாராணி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மணியாரம்பட்டியை சேர்ந்த சிவா (வயது 23), வளநாடு வாடிப்பட்டி கிராமத்தைச் திருப்பதி (23) ஆகிய 2 பேர் காரணமின்றி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதனால் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் ஓட்டி சென்ற 2 மோட்டார் சைக்கிள்களையும் உலகம்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர்.