மீன்பிடி படகுகளில் திடீர் தீ்
மீன்பிடி படகுகளில் திடீர் தீ் பிடித்து எரிந்து நாசமானது.
ராமேசுவரம்,
முழு ஊரடங்கு காரணமாக நாட்டுப்படகுகள் பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு கரையோரத்தில் உள்ள கடலில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப் பட்டுள்ளன.
இந்த நிலையில் பாம்பன் வடக்கு கடற்கரை பகுதியில் கரை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பெனிட்டோ, போஸ்கோ ஆகியோருக்கு சொந்தமான 2 நாட்டுப்படகுகள் திடீரென தீப்பிடித்து எரிந்தன.
இதில் ஒரு நாட்டுப்படகு முழுமையாக தீப்பிடித்து எரிந்து நாசமானது. மற்றொரு படகு பாதி அளவு எரிந்ததுடன் படகில் இருந்த மீன்பிடி வலை உள்ளிட்ட அனைத்து சாதனங்களும் எரிந்து நாசமாகின.
மற்ற படகுகளுக்கும் தீ பரவாமல் இருக்க மீனவர்கள் வேகமாக தீயை அணைத்தனர். சம்பவம் குறித்து பாம்பன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.