குன்னத்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குன்னத்தூரில் குழாய் உடைந்து வீணாகும் குடிநீர்
குன்னத்தூர்
குன்னத்தூர் பஸ் நிலையம் அருகே குழாய் உடைந்து குடிநீர் வீணாகிறது. குழாயில் இருந்து வெளியேறும் குடிநீரானது அருகில் குளம் போல் தேங்கி உள்ளது. மேலும் அந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்லும் போது தண்ணீர் தெறிக்கிறது. எனவே குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.