கோவை
கோவையில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு உள்ள சில உணவகங்களில் அரசின் விதிமுறைகளை மீறி கடைகள் செயல்படுவதா கவும் இதனால் தொற்று பரவும் அபாயம் உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நேற்று இ.எஸ்.ஐ. மருத்துவமனை முன்பு உள்ள 3 சிறிய உணவகங்களை சிங்காநல்லூர் போலீசாரின் உதவியுடன் மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.