தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையில் போலீசார் நேற்றுமுன்தினம் தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தூத்துக்குடி கே.டி.சி. நகரை சேர்ந்த பால்ராஜ் மகன் கோபால் (வயது 20) என்பவரும், தூத்துக்குடி ராஜீவ்நகரை சேர்ந்த கலைச்செல்வம் மகன் மருதநாயகம் (19) என்பவரும,் தூத்துக்குடி மடத்தூர் ஆர்ச் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபால் மற்றும் மருதநாயகம் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து தலா 100 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.