வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ரூ.75 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் விரைவில் தொடங்கப்படும் கலெக்டர் தகவல்
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் ரூ.75 லட்சத்தில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் விரைவில் தொடங்கப்படும் என கலெக்டர் பிரவீன் நாயர் தெரிவித்தார்.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் சென்றார். அப்போது பணியில் இருந்த டாக்டர்களுடன் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மற்றும் சிகிச்சை முறைகள் குறித்தும் மருந்துகள் இருப்பு பற்றி ஆலோசனை நடத்தினார்.
பின்னர் புறநோயாளிகள் மற்றும் உள்ளிருப்பு நோய்களின் பிரிவுக்கு சென்று பார்வையிட்டு அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சை முறை குறித்து கேட்டறிந்தார். அப்போது மருத்துவமனை தலைமை டாக்டர் முருகப்பன், ஆர்.டி.ஓ. துரைமுருகன், நகராட்சி ஆணையர் மகேஸ்வரி, என்ஜினீயர் பிரதான் பாபு, சுகாதார ஆய்வாளர் வெங்கடாசலம், ஒன்றிய ஆணையர்கள் ராஜு, வெற்றிச்செல்வன் உள்பட அதிகாரிகளிடம் மருத்துவ, சுகாதார செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
இதை தொடர்ந்து வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் புதிதாக அமைக்கப்பட உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் கட்டப்படும் இடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்து உடனே பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையெடுத்து கலெக்டர் பிரவீன் நாயர் கூறியதாவது:-
கொரோனா சிகிச்சை முகாம்
தற்போது தரம் உயர்த்தப்பட்ட வேதாரண்யம் மருத்துவமனைக்கு தேவையான உள்கட்டமைப்பு மற்றும் இதர வசதிகளுக்கான பணிகள் குறித்து அறிக்கைகள் வரப்பெற்ற பின்னர் பணிகள் தொடங்கப்படும்.மேலும் நாகை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1400 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர 300 பேர் வேதாரண்யம் மற்றும் நாகை அரசு மருத்துவமனைகள் மற்றும் கரியாப்பட்டினம், நாகை, வேதாரண்யத்தில் உள்ள பாரதிதாசன் கல்லூரிகள், கீழ்வேளூர் உள்ள ஒரு தனியார் கல்லூரி உள்பட 7 இடங்களில் கொரோனா சிறப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கு தேவையான மருத்துவ வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் உள்ள மருத்துவமனைகளில் 95 சதவீத ஆக்சிஜன் படுக்கைகளில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆக்சிஜன் உற்பத்தி பிரிவு
வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். மேலும் 20 சிலிண்டர்கள் கூடுதலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் அரசு மருத்துவமனை வளாகத்தில் மத்திய, மாநில அரசுகளின் நிதி ரூ.75 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி நிலைய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதில் இருந்து நிமிடத்திற்கு 500 லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படும். ஆக்சிஜன் உற்பத்தி நிலைய கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு 20 முதல் 25 நாட்களுக்குள் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.