காஞ்சீபுரம் அருகே ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்

புறநகர் வளர்ச்சியில் பெரிதும் பொதுமக்களை கவரும் பகுதியாக இந்த கிராமம் உள்ளது.

Update: 2021-05-17 00:11 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் நகரை ஓட்டி அமைந்துள்ளது வையாவூர் கிராமம். புறநகர் வளர்ச்சியில் பெரிதும் பொதுமக்களை கவரும் பகுதியாக இந்த கிராமம் உள்ளது. இங்கு 1000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பெரும் குடிநீர் ஆதாரமாக விளங்குவது வையாவூர் ஏரியாகும். கடந்த 2 நாட்களாக ஏரியின் நீர்மட்டம் குறைவதாலும், கடும் கோடை காரணமாக ஏரியில் வளர்ந்து வரும் மீன்கள் செத்து கரையோரம் குவிந்துள்ளது. செத்து கிடக்கும் மீன்களை பறவைகள் எடுத்து சென்று கிராம பகுதியில் போட்டுவிட்டு செல்வதாலும் கரையோரத்தில் மீன்கள் செத்து கிடப்பதாலும் அதிக அளவில் துர்நாற்றம் வீசுகிறது.

இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்ற அச்சம் அந்த பகுதி மக்களிடையே எழுந்துள்ளது மேலும் குடிநீர் ஆதாரத்திற்கும் பாதிப்பு எழுமோ என்ற அச்சம் அந்த பகுதி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்