வீராணம் அருகே வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை
வீராணம் அருகே வாராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.
சேலம்:
சேலம் மாவட்டம் வீராணம் அருகே கொம்பேரிகாடு பகுதியில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வாராகி அம்மன் சன்னதி இருக்கிறது. இங்கு அம்மனுக்கு நேற்று பஞ்சமி திருதியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பக்தர்கள் இன்றி பூஜைகள் நடந்தன. மேலும் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் விடுபடவும், பாதிக்கப்பட்டவர்கள் பூர்ண குணமடையவும் பூஜைகள் செய்யப்பட்டன.