கொளக்காநத்தம் பகுதியில் 4 நாட்கள் மின்சாரம் நிறுத்தம்
கொளக்காநத்தம் பகுதியில் 4 நாட்கள் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் கூத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் பி.ஆர்.நல்லூர் மின்னூட்டியில் உயர் ரக மின் கம்பிகள் மாற்றும் பணிகள் இன்று (திங்கட்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) மற்றும் 21, 24-ந் தேதிகள் ஆகிய 4 நாட்கள் நடைபெற உள்ளது. எனவே கூத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பேரையூர், நொச்சிக்குளம், பி.ஆர்.நல்லூர், ரசுலாபுரம், மேத்தால், கொளக்காநத்தம் ஆகிய பகுதிகளில் மேற்கண்ட நாட்களில் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவல் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அரியலூர் (வடக்கு) உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.