உத்தமர்கோவில் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம்
உத்தமர்கோவில் சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
கொள்ளிடம் டோல்கேட்,
தமிழகத்தில் கொரோனா தொற்றுநோய் பரவலை தடுக்கும் பொருட்டு பொதுமக்களுக்கு எதிர்ப்பு சக்தியைக் கூட்டும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில் நிர்வாகம் மூலம் பொதுமக்களுக்கு இலவச கபசுரகுடிநீர் தினமும் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர்கோவில் நிர்வாகம் சார்பில் பொதுமக்களுக்கு இலவச கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ஜெய்கிஷன், மண்ணச்சநல்லூர் சரக இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.