கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 684 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 684 பேருக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2021-05-16 18:10 GMT
கிருஷ்ணகிரி:

தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 684 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 112 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். 

மாவட்டத்தில் இதுவரை 22 ஆயிரத்து 936 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 17 ஆயிரத்து 239 பேர் சிகிச்சையில் குணமடைந்துள்ளனர். தற்போது 5 ஆயிரத்து 539 பேர் சிகிச்சையில் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 158 ஆக உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்