வேலூர் ஓல்டு டவுனில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு

வேலூர் ஓல்டு டவுனில் கொரோனாவுக்கு பலியான பெண்ணின் உடல் தோண்டி எடுப்பு

Update: 2021-05-16 17:14 GMT
வேலூர்

வேலூர் தோட்டப்பாளையம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் ரோசி. இவர் கொரோனா தொற்று காரணமாக கடந்த 10-ந்தேதி வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி ரோசி நேற்று உயிரிழந்தார்.

இதையடுத்து மருத்துவமனை நிர்வாகம் முழு பாதுகாப்புடன் ரோசியின் உடலை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். ரோசியின் குடும்பத்தினர் முதலில் வேலூர் ஓல்டுடவுனில் வசித்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தோட்டப்பாளையம் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. ரோசியின் உடலை ஓல்டுடவுனில் உள்ள சுடுகாட்டில் புதைத்தனர். 
இதையறிந்்த அப்பகுதி பொதுமக்கள் கொரோனாவால் பலியானவரின் உடலை புதைத்தற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

 இதுவரை இங்கு கொரோனா நோயாளிகள் உடல்கள் புதைக்கப்படவில்லை. அரசின் விதிமுறையை பின்பற்றி அந்த உடல் புதைக்கப்படவில்லை. எனவே உடலை தோண்டி எடுத்து வேறு இடத்தில் புதைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். 
அதன்படி பொதுமக்களின் எதிர்ப்பை தொடர்ந்து பொக்லைன் எந்திரம் மூலம் ரோசியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. பின்னர் ஆம்புலன்சிஸ் உடல் எடுத்து செல்லப்பட்டு வேலூர் பாலாற்றங்கரையோரம் அரசு விதியின்படி மீண்டும் புதைக்கப்பட்டது. இதனால் ஓல்டுடவுன் பகுதியில் சிறிதுநேரம் பதற்றம் காணப்பட்டது.

மேலும் செய்திகள்