பலத்த காற்றுடன் பெய்த மழை
கமுதி அருகே பலத்த காற்றுடன் பெய்த மழையில் வாழை மரங்கள் சேதமாகின.
கமுதி,
கமுதி அருகே கோரப்பள்ளம், கூலிபட்டி, ராமசாமிபட்டி, கிழாமரம், காவடிபட்டி, நீராவி, கரிசல்குளம், மேலராம நதி, கீழராம நதி, கீழமுடிமன்னார்கோட்டை உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று, இடி மின்னலுடன் மழை பெய்தது. இதில் 50 ஏக்கரில் பயிரிடப்பட்ட ரூ.80 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்து விழுந்து சேதமாகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். கடந்த 2 மாதத்திற்கு மேலாக அனல் காற்று வீசி கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மழையால் வெப்பம் தணிந்தது.