19 வயது இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய 70 வயது முதியவர் போக்சோ சட்டத்தில் கைது
19 வயது இளம்பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதாக 70 வயது முதியவரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை புதுவண்ணாரப்பேட்டை புச்சம்மாள் தெருவைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 70). இவர், குடும்பத்தினர் அனைவருடனும் கூட்டு குடும்பமாக வசித்து வருகிறார்.
இந்தநிலையில் முதியவர் பன்னீர்செல்வம், 19 வயது இளம்பெண்ணை மிரட்டி, “உங்கள் குடும்பத்துக்கே நான்தான் சோறு போடுகிறேன்” என்று கூறி அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்தார். இதில் அந்த இளம்பெண் கர்ப்பம் அடைந்தார்.
இதையறிந்த இளம்பெண்ணின் தாய் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போக்சோ சட்டத்தில் கைது
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில் பன்னீர்செல்வம், இளம்பெண்ணை மிரட்டி கர்ப்பமாக்கியது உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் அவரை போலீசார் கைது செய்தனர்.