காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறல்; ஒரே நாளில் 222 வாகனங்கள் பறிமுதல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகள் மீறல்; ஒரே நாளில் 222 வாகனங்கள் பறிமுதல்.
காஞ்சீபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா ெதாற்று 2-வது அலையின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகமும், மாவட்ட போலீஸ் துறையும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகபிரியா உத்தரவின்பேரில் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் பணி அமர்த்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து அந்த வழியாக வரும் வாகனங்களில் சோதனை செய்து வருகின்றனர். அதன்படி நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் ஊரடங்கு விதிகளை மீறியவர்களின் 222 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் முககவசம் அணியாதது தொடர்பாக 160 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.