இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு 1,200 உணவு பொட்டலங்கள்
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு 1,200 உணவு பொட்டலங்கள்.
காஞ்சீபுரம்,
தமிழக அரசு உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒருங்கிணைந்த காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு மதிய உணவாக தினந்தோறும் உணவு பொட்டலங்கள் வழங்கும் பணி கடந்த 12-ந்தேதி முதல் தொடர்ந்து நடந்து வருகிறது.
அந்த வகையில் நேற்று காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் சார்பாக 600 உணவு பொட்டலங்களும், காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில் சார்பாக 600 உணவு பொட்டலங்களும் என மொத்தம் 1,200 உணவு பொட்டலங்கள் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு வழங்கப்பட்டன.
காஞ்சீபுரம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில், கோவில் செயல் அலுவலர்கள் என்.தியாகராஜன், ஆ.குமரன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட கோவில் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.