சூதாடிய 5 பேர் கைது
திருத்தங்கல் அருகே சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
திருத்தங்கல் போலீசார் இந்திராநகர் குடியிருப்பு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அதே பகுதியை சேர்ந்த அய்யனார் (வயது 40), ராசு (44), முத்தையா (56), காளியப்பன் (53), சங்கரபாண்டி (55) ஆகியோர் காசு வைத்து சூதாடியது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து ரூ.360-யை பறிமுதல் செய்தனர்.