அரசு மருத்துவமனைகளில் தனுஷ்குமார் எம்.பி. ஆய்வு

ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைகளில் தனுஷ்குமார் எம்.பி. திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-05-15 20:34 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைகளில் தனுஷ்குமார் எம்.பி. திடீரென ஆய்வு மேற்கொண்டார்.  
ஸ்ரீவில்லிபுத்தூர் 
ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் தனுஷ்குமார் எம்.பி. நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் தலைமை மருத்துவர் காளிராஜீடம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார்.  
தொடர்ந்து அவர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் இருப்பு உள்ளதா என மருத்துவரிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின் போது நகர தி.மு.க. செயலாளர் அய்யாவு பாண்டியன், தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் தங்க மாங்கனி, தங்க ரவி கண்ணன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். 
வத்திராயிருப்பு 
அதேபோல  வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையிலும் தனுஷ்குமார் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.  கொரோனா நோயாளிகள் வார்டுகளில் போதிய வசதிகள் உள்ளதா, அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகள் வழங்கப்படுகிறதா என  தலைமை மருத்துவர் பாலகிருஷ்ணனிடம் கேட்டறிந்தார். 
அப்போது வத்திராயிருப்பு ஒன்றிய செயலாளர் முனியாண்டி, ஒன்றிய கவுன்சிலர் கண்ணன், நகர செயலாளர் முனியாண்டி மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்