கல்லணை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் பெய்த தொடர்மழையின் காரணமாக கல்லணை ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

Update: 2021-05-15 20:34 GMT
தளவாய்புரம், 
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியில் கடந்த வாரம் பெய்த பலத்த மழையினால் சாஸ்தா கோவில் அணை நிரம்பியது. இந்தநிலையில் மீண்டும் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று முழுவதும் இந்தபகுதியில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் அணையில் இருந்து நிரம்பி வெளியேறும் நீரின் அளவு அதிகரித்ததால் சேத்தூர் அருகே உள்ள கல்லணைஆற்று பகுதியில்  நீர்வரத்து அதிகரித்தது. 
இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் நெற்பயிரை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் மழையினால் பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அறுவடைக்கு தயாராக உள்ள சிலரது நெற்பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் இவர்கள் கவலை அடைந்துள்ளனர். கல்லணை ஆற்றில் இருந்து வெளியேறும் நீரில் சிலர் மீன்பிடித்து சென்றனர். 

மேலும் செய்திகள்