சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 829 பேர் பாதிப்பு 3 பெண்கள் உள்பட 12 பேர் பலி
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 829 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 3 பெண்கள் உள்பட 12 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 829 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் 3 பெண்கள் உள்பட 12 பேர் கொரோனாவுக்கு பலியாகினர்.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மேலும் கொரோனாவால் உயிரிழப்புகளும் அதிகளவு ஏற்படுகின்றன. நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 798 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் 829 பேருக்கு கொரோனா தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 429 பேர், ஆத்தூரில் 55 பேர், வீரபாண்டியில் 46 பேர், ஓமலூரில் 41 பேர், சேலம் ஒன்றியத்தில் 40 பேர், சங்ககிரியில் 32 பேர், எடப்பாடியில் 25 பேர், வாழப்பாடியில் 23 பேர், பனமரத்துப்பட்டியில் 20 பேர், தாரமங்கலத்தில் 16 பேர், காடையாம்பட்டி, நங்கவள்ளி ஆகிய பகுதிகளில் தலா 13 பேர், அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு ஆகிய பகுதிகளில் தலா 11 பேர், மேச்சேரியில் 10 பேர், கொங்கணாபுரம், தலைவாசல், நரசிங்கபுரம் ஆகிய பகுதிகளில் தலா 8 பேர், மேட்டூரில் 6 பேர், பெத்தநாயக்கன்பாளையம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 4 பேர், மகுடஞ்சாவடி, கெங்கவல்லியில் தலா 3 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
4,309 பேருக்கு சிகிச்சை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்கள் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 3 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஆஸ்பத்திரிகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 737 பேர் குணமடைந்துவிட்டதால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தொடர்ந்து 4,309 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. மாவட்டத்தில் உள்ள 70-க்கும் மேற்பட்ட கட்டுப்படுத்த பகுதிகளில் நோய் தடுப்பு பணிகளில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
12 பேர் பலி
சேலத்தை சேர்ந்த 58, 70, 48, 37, 58, 67 ஆகிய வயதுடைய ஆண்களும், 57 வயதுடைய பெண்ணும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர்கள் பரிதாபமாக இறந்தனர். மேலும் 48, 72, 63 வயதுடைய ஆண்களும், 60, 65 வயதுடைய பெண்களும் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பலியானார்கள்.
இவர்கள் உள்பட மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 668 ஆக அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.