ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு

ஆக்சிஜன் உற்பத்தி ஆலையை அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2021-05-15 19:39 GMT
திருச்சி, 
கொரோனா நோயாளிகளின் சிகிச்சை பயன்பாட்டிற்கு தேவைப்படுகின்ற தனியார் ஆக்சிஜன் உற்பத்தி ஆலை திருச்சி- தஞ்சை ரோடு புதுக்குடி அருகில் அமைந்துள்ளது. திருச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மற்றும் அருகில் மாவட்ட மருத்துவமனைகளுக்கு தேவையான மருத்துவ ஆக்சிஜனை இந்த நிறுவனம் உற்பத்தி செய்து வழங்குகிறது. அதை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு ஆக்சிஜன் உற்பத்தி குறித்த விவரங்களை கேட்டறிந்ததுடன், உற்பத்தியின் அளவை அதிகரிப்பதும் குறித்து அங்கிருந்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தற்போது அந்நிறுவனத்தின் உற்பத்தி மொத்த கொள்ளளவு 50 மெட்ரிக் டன் ஆகும். மேலும் இங்கு உற்பத்தி செய்யப்படுகிற 100 சதவீத ஆக்சிஜன் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப படுவதாகவும் அமைச்சரிடம் தெரிவித்தனர். முன்னதாக, துவாக்குடியில் அமைந்துள்ள திருச்சி தேசிய தொழில்நுட்ப கல்லூரி (என்.ஐ.டி.) வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் கொரோனா நோயாளிகளுக்கான தனிமைப்படுத்தும் சிகிச்சை மையத்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அங்கு 500 படுக்கைகளுடன் கூடிய தனிமை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் என்னென்ன வசதிகள் தேவை? என்பது குறித்து அங்குள்ள மருத்துவர்களிடம் கலந்தாலோசித்தார்.

மேலும் செய்திகள்