ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு அபராதம்
ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி திறந்திருந்த கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர்.
தாமரைக்குளம்:
கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கில் கூடுதல் கட்டுப்பாடுகளை நேற்று முதல் அரசு அமல்படுத்தியது. இதன்படி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மளிகை, காய்கறி கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் அதனை மீறி அரியலூரில் திறந்திருந்த கடைகளை மூட போலீசார் வலியுறுத்தினர். அதன்பிறகும் திறந்திருந்த சுமார் 8 கடைகளுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். இதில் மொத்தம் ரூ.4 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் கடைக்காரர்களை உரிய நேரத்தில் கடைகளை மூடத்தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் ஊரடங்கு காலத்தில் பணியில் ஈடுபட்டுள்ள போலீசாருக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் தயாரிக்கப்பட்ட தேனீரை, போலீஸ் துணை சூப்பிரண்டு மதன் வழங்கினார். அப்போது அந்த வழியாக வந்த கோட்டாட்சியர் ஏழுமலை, தாசில்தார் ராஜமூர்த்தி ஆகியோருக்கும் தேனீர் வழங்கப்பட்டது.