மகளிர் சுகாதார வளாகத்தை உடனடியாக திறக்க கோரிக்கை

மகளிர் சுகாதார வளாகத்தை உடனடியாக வேண்டும்.

Update: 2021-05-15 18:23 GMT
கரூர்
கரூர் தாந்தோணி ஒன்றியம் சின்னமநாயக்கன்பட்டியில் கடந்த 2012-ம் ஆண்டு ஊரக கட்டிட பராமரிப்பு மற்றும் சீரமைப்பு திட்டத்தின் கீழ் பெண்களுக்காக மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதன் அருகே  ஆழ்குழாய் கிணறு அமைத்து, மின் மோட்டார் பொருத்தி தண்ணீர் வசதியும் செய்யப்பட்டது. இந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு 10 ஆண்டுகளாகியும் திறக்கப்படாமல் பழுதடைந்து காணப்படுகிறது. எனவே அப்பகுதி மகளிர் நலன் கருதி உடனடியாக சுகாதார வளாகத்தை சீர் செய்து உடனடியாக பயன்பாட்டிற்கு விட வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்