உடுமலை உழவர்சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை தொடர்ந்து தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.
உடுமலை உழவர்சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை தொடர்ந்து தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.
உடுமலை
உடுமலை உழவர்சந்தையில் காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததை தொடர்ந்து தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் விரைந்து சென்று, சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தினர்.
உழவர்சந்தை
உடுமலை கபூர்கான் வீதியில் உழவர் சந்தை உள்ளது. இந்த உழவர்சந்தைக்கு உடுமலை மற்றும் மடத்துக்குளம் தாலுகாவில் உள்ள விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் விளையும் காய்கறிகளை தினசரி அதிகாலையிலேயே கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த சில நாட்களாக உழவர் சந்தைக்கு காய்கறிகள் வாங்குவதற்கு வரும் பொதுமக்கள் கூட்டம் குறைவாக இருந்து வந்தது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுபரவலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒன்றாக, காய்கறி கடைகள், உழவர் சந்தை ஆகியவை காலை 6மணிமுதல்10மணிவரை மட்டுமே திறக்கப்பட்டிருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது.அத்துடன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு ஆகும்.அதனால் இன்று உழவர் சந்தையும் மூடப்பட்டிருக்கும்.
பொதுமக்கள் கூட்டம்
இந்த நிலையில், உடுமலை உழவர்சந்தையில் நேற்று காய்கறிகள் வாங்குவதற்கு பொதுமக்கள் கூட்டம், கடந்த சில நாட்களை விட அதிகமாக இருந்தது. சில கடைகளில் மக்கள் சமூக இடைவெளியில்லாமல் நெருக்கமாக நின்று காய்கறிகளை வாங்கினர். உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்குவதற்கு வந்த பொதுமக்களின் இருசக்கர வாகனங்கள், உழவர்சந்தைக்கு வெளியில் நீண்ட தூரத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
அத்துடன் உழவர்சந்தைக்கு வெளியே வியாபாரிகள் திறந்த வெளியில் காய்கறிகடைகளை வைத்திருந்தனர். இந்த கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் இருந்தது. சாலைகளில் தள்ளுவண்டி கடைகளும் இருந்தது. அதனால் சாலையோரம் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாமல் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். அத்துடன் இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
அதிகாரிகள் விரைந்தனர்
உழவர் சந்தை பகுதியில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
தகவல் கிடைத்ததும் தாசில்தார் வி.ராமலிங்கம் தலைமையில் வருவாய்துறையினர், நகராட்சி அலுவலர்கள் மற்றும் போலீசார் அங்கு உடனடியாக விரைந்து சென்று, சமூக இடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி, கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒழுங்கு படுத்தினர்.
பூ,பழக்கடைகள் அடைப்பு
உடுமலை மத்திய பஸ் நிலையத்திற்கு முன்பு உள்ள பழனிசாலை மற்றும் ராஜேந்திரா சாலை உள்ளிட்ட சில இடங்களில் ஏறாளமான நடைபாதை பழக்கடைகள் மற்றும் பூக்கடைகள்உள்ளன.இந்த கடைகள் அரசின் உத்தரவுப்படி நேற்று அடைக்கப்பட்டிருந்தன. நேற்று முதல், அரசால் அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் காலை 6 மணி முதல் 10 மணிவரை மட்டுமே செயல்படலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளதால் உடுமலையில் நேற்று காலை சில மளிகைக்கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
காலை 10 மணிக்கு பிறகு சில தனியார் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டும் சென்று கொண்டிருந்தன. இருசக்கர வாகனங்களில் சென்றவர்களை போலீசார் நிறுத்தி அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது என்று அறிவுறுத்தினர். பிற்பகல் முதல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.