ஆதரவற்றோருக்கு உணவு வழங்கிய போலீஸ் டி.ஐ.ஜி.

பழனி, நத்தம் பகுதிகளில் ஆதரவற்றோருக்கு உணவு போலீஸ் டி.ஐ.ஜி. முத்துசாமி உணவு பொட்டலங்களை வழங்கினார்.

Update: 2021-05-15 16:12 GMT
பழனி:

பழனி பகுதியில் ஊரடங்கு கண்காணிப்பு பணி குறித்து, திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். பழனி பஸ்நிலைய ரவுண்டானா, குளத்து ரவுண்டானா, திண்டுக்கல் சாலை ஆகிய பகுதிகளில் ஆய்வு செய்தபோது, சாலைகளில் தேவையில்லாமல் சுற்றி திரிந்த நபர்களை எச்சரித்து அனுப்பினார்.

மேலும் சாலைகளில் பொதுமக்கள் தேவையின்றி வாகனங்களில் சுற்றுவதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இதைத்தொடர்ந்து பழனி பஸ்நிலைய பகுதியில் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு, தன்னார்வலர்கள் உதவியுடன் உணவு பொட்டலங்களை அவர் வழங்கினார். இந்த ஆய்வின்போது பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவா மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

இதேபோல் நத்தம் பஸ் நிலையம், பெரியகடைவீதி, அவுட்டர், கோவில்பட்டி பகுதிகளில் நேற்று டி.ஐ.ஜி முத்துசாமி திடீர் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் பஸ் நிலையத்தில் உள்ள ஆதரவற்றவர்களுக்கு ரொட்டி, பிஸ்கட் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். 

ஆய்வின்போது போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார், இன்ஸ்பெக்டர் ராஜமுரளி, சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் உடனிருந்தனர். 

மேலும் செய்திகள்