புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் பரவலாக மழை

புஞ்சை புளியம்பட்டியில் பரவலாக மழை பெய்தது.

Update: 2021-05-14 20:16 GMT
புஞ்சைபுளியம்பட்டி, காராப்பாடி, காவிலிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இதனால் ரோடுகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. மேலும் பெருக்கெடுத்து ஓடிய மழை நீரானது அங்குள்ள காவிலிபாளையம் குளத்துக்கு சென்றது. 
புஞ்சைபுளியம்பட்டியை அடுத்த சின்னாங்குட்டை, தேவம்பாளையம் ஆகிய பகுதியில் உள்ள 2 குட்டைகள் நிரம்பின. இந்த மழையால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

மேலும் செய்திகள்