அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மதிய உணவு

அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

Update: 2021-05-14 19:08 GMT
கரூர், மே.15-
கரூர் தாந்தோணிமலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில் சார்பாக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் என 1,000 பேருக்கு பொட்டலமாக மதிய உணவு வழங்கப்பட்டது. அப்போது மருத்துவமனை அதிகாரி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மற்றும் வருவாய் கோட்டாட்சியர், தாசில்தார் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்