குளித்தலை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு
குளித்தலை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.
குளித்தலை, மே.15-
குளித்தலை இரா.மாணிக்கம் எம்.எல்.ஏ. குளித்தலை அரசு மருத்துவனையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கொரோனா நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்?, அவர்களுக்கு படுக்கை வசதி செய்து தரப்பட்டுள்ளதா?, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், ஆக்சிஜன் போதுமான அளவு உள்ளதா? என்று மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ஸ்ரீகாந்திடம் கேட்டறிந்தார். பின்னர் மற்ற வார்டுகளையும் பார்வையிட்டு நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவருடன் தி.மு.க. மாநில வர்த்தக அணி துணை செயலாளர் பல்லவிராஜா மற்றும் நிர்வாகிகள் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.