ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
ஜோலார்பேட்டை பகுதியில் கஞ்சா விற்றவர் கைது
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே புது ஓட்டல் தெருவில் கஞ்சா விற்பதாக ஜோலார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜெயலட்சுமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர்.
அங்கு கஞ்சா விற்றுக் கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் சமத்பாய் தெருவை சேர்ந்த புருஷோத்தமனின் மகன் அப்பு என்ற பிரபாகரன் (வயது 34) எனத் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அவர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.