வால்பாறையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
வால்பாறையில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
வால்பாறை
வால்பாறையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. சில நேரத்தில் பலத்த மழையும் பெய்கிறது. இதனால் வால்பாறை மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருகிறது.
தொடர் மழை காரணமாக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மாலை 3 மணிக்கு பணி முடிந்து வீடு திரும்பினார்கள். மேலும் ஆங்காங்கே நீரோடைகள் மற்றும் அருவிகளும் தோன்றி உள்ளன.
மேலும் கனமழை காரணமாக சோலையார், நீரார், சின்னக் கல்லார் ஆகிய அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
தொடர்மழை மற்றும் ஊரடங்கு காரணமாக வால்பாறையில் வீடுகளை விட்டு யாரும் வெளியே செல்லவில்லை. பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.
இந்த நிலையில் திடீரென்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை தொடர்ந்து நீடித்தது.
கடந்த 24 மணி நேரத்தில் வால்பாறையில் 23 மி.மீட்டரும், சோலையார் அணையில் 12 மி.மீட்டரும், சின்னக்கல்லாரில் 25 மி.மீட்டரும், நீராரில் 17 மி.மீட்டர் மழையும் பெய்து உள்ளது.
சோலையார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வினாடிக்கு 189 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.