ஊரடங்கு நேரத்தில் ஊர்சுற்றினால் கடும் நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரிக்கை

ஊரடங்கு நேரத்தில் ஊர்சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் எச்சரித்துள்ளார்

Update: 2021-05-14 17:02 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியில் நேற்று ேபாலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டார். ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காரணம் இன்றி வாகனங்களில் ஊர்சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரிக்கை விடுத்தார்.
வாகன சோதனை
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேற்று மாலையில் கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு திடீர் வாகன சோதனை நடத்தி னார். 
அப்போது இரண்டு சக்கர வாகனங்களில் ஊர்் சுற்றியவர்களை அவர் எச்சரித்தார். அப்போது அவர் கூறுகையில்,‘ ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் காரணம் எதுவும் இன்றி வீணாக வெளியே வராதீர்கள். கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நீங்கள் வெளியே வந்து விட்டு வீட்டிற்கு செல்லும் போது கை கால் களை சுத்தம் செய்து விட்டு உள்ளே செல்லுங்கள். அப்படி செய்ய வில்லை என்றால் மற்றவர் களுக்கு கொரோனா பரவும் அபாயம் உள்ளது. உங்கள் குடும்பத் தினரை நினையுங்கள். இனிமேல் காரணம் எதுவும் இன்றி வாகனங்களில் ஊர்சுற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
முன்னதாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அண்ணன்-தம்பி கைது
கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கலைகதிரவன், இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்இன்ஸ்பெக்டர்கள் மாதவராஜா, சிவராஜா, நாராயணசாமி, ஏட்டு முருகன், காவலர்கள் ஸ்ரீராம், உலகநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் மேற்கொண்ட சோதனையில் கள்ளசந்தையில் விற்பதற்காக பதுக்கி வைத்திருந்த 46 ரெம்டிசிவர் குப்பிகள் பறிமுதல் செய்யபட்டுள்ளது. இது தொடர்பாக சண்முகம், கணேசன் ஆகிய 2 பேர் கைதானார்கள். இவர்கள் அண்ணன் -தம்பி ஆவர்.
இந்த மருந்து அரசு மருத்துவமனைகளில் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை அதிக விலைக்கு விற்கும் நோக்கத்தில் தனியார் மருந்தகத்தில் வைத்து இருக்கிறார்கள். ஒரு குப்பி ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
கைதானவர்களிடம் விசாரித்தபோது நெல்லையில் ஒரு இடத்தை சொன்னார்கள். அங்கு நடந்த சோதனையில் இது போல் ரெம்டெசிவர் மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் மதுரையில் அவர்கள் சொன்ன இடத்திலும் சோதனை நடத்தி மருந்து குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் விசாரணை நடந்து வருகிறது.
குண்டர் சட்டத்தில் நடவடிக்கை
இந்த மருந்தை கள்ளசந்தையில் விற்பவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குண்டர் சட்டத்தில் கைது செய்ய்படுவார்கள். டாக்டர்கள் யார், யாருக்கு இது போல் விற்று இருக்கிறார்கள் என்பது குறித்தும் கணக்கு எடுத்து வருகிறோம். அது தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 
இவ்வாறுஅவர் கூறினார்.

மேலும் செய்திகள்