ஊரடங்கை மீறியவர்கள் மீது 203 வழக்குகள் பதிவு
மதுரையில் கடந்த 2 நாட்களாக ஊரடங்கை மீறியவர்கள் மீது 203 வழக்குகள் பதிவு
மதுரை,மே.
மதுரை நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். தேவையின்றி சாலைகளில் சுற்றி திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2 தினங்களாக மதுரை நகரில் ஊரடங்கை மீறி வாகனங்களில் சென்ற நபர்கள் மீது போக்குவரத்து போலீசார் 203 வழக்குகள் பதிவு செய்து தலா 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். இந்த நடவடிக்கை இன்று முதல் கடுமையாக இருக்கும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.