பாப்பம்பட்டியில் குடியிருப்பாக மாறிய கிராம சேவை மைய கட்டிடம்
பாப்பம்பட்டியில் குடியிருப்பாக பயன்படுத்தப்பட்டு வரும் கிராம சேவை மைய கட்டித்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்
கிராமசேவை மைய கட்டிடம்
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது பாப்பம்பட்டி கிராமம். இங்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்டவர்களுக்கு அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்தும், அதனை விரிவாக எடுத்துக் கூறுவதற்கு ஒவ்வொரு கிராமங்களுக்கும் தனித்தனியாக கிராம சேவை மையம் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
அந்த வகையில் பாப்பம்பட்டியில் ரூ.15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கிராம சேவை மைய கட்டிடம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது.
குடியிருப்பாக மாறியது
இந்த நிலையில் கிராமசேவை கட்டிடத்தை குடியிருப்பாக மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். எனவே அரசு அறிவிக்கும் திட்டங்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துக் கூறுவதற்கு வசதியாக கட்டப்பட்ட இந்த கிராம சேவை மைய கட்டிடத்தை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.