சாலையோரம் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள்
பல்லடம் அருகே சாலையோரம் கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகள்
பல்லடம்
பல்லடம் அருகே கோவை- திருச்சி மெயின் ரோட்டில் மாதப்பூர் அமைந்துள்ளது. இங்கு சாலையோரம் கோழி இறைச்சி கழிவுகள், கோழிப்பண்ணைகளுக்கு பயன்படுத்தப்படும் அட்டைகள், விற்பனையாகாத காய்கறிகள் போன்றவற்றை கொண்டு வந்து கொட்டி விடுகின்றனர். இதனால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும், குப்பைகளை தீ வைத்தும் எரிக்கின்றனர். இதனால், அங்கு புகை மண்டலம் சூழ்வதால் வாகன ஓட்டிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவதிப்படுகின்றனர். எனவே சாலையோரம் குப்பை கொட்டுவோர் மீது ஊராட்சி நிர்வாகம் மற்றும் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.