கிறிஸ்தவ ஆலயத்தில் தங்க கிரீடம் திருட்டு

திருமயம் அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் இருந்த தங்க கிரீடம் திருட்டு போனது

Update: 2021-05-13 20:41 GMT
திருமயம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசல் மெய்யபுரத்தில் செபஸ்தியார் ஆலயம் உள்ளது. அரசு வழிகாட்டு நெறிமுறைகளின்படி தற்போது இந்த ஆலயம் பூட்டப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று முன்தினம் அந்த ஆலயத்தின் பாதிரியார் ஆலயத்தை திறந்து பார்த்தபோது கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டிருந்த 2 பவுன் தங்க கிரீடம் திருட்டு போயிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து திருமயம் போலீசில் பாதிரியார் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் கடந்த வாரம் நடைபெற்ற வழிபாட்டின் போது மர்ம நபர் ஒருவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம் என்று தெரிய வந்தது. இந்த திருட்டு சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க கிரீடத்தை திருடிச் சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்