மாணவியை கடத்திய வாலிபர் கைது
மாணவியை கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்
திருமயம்
திருமயம் பகுதியை சேர்ந்த 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி சம்பவத்தன்று கடைக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து திருமயம் போலீசில் அந்த மாணவியின் தந்தை புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருமயம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 30) என்பவர் மாணவியை கடத்தி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார், பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.