கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி மனு
கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
பெரம்பலூர்:
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் பெரம்பலூர் மாவட்ட செயலாளர் முஹம்மது அலி தலைமையில், அந்த அமைப்பினர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்களை நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் நல்லடக்கம் செய்து வருகின்றனர். அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவினால் உயிரிழப்பவர்களின் உடல்களை நல்லடக்கம் செய்ய பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர்.