வாடிப்பட்டி,மே
வாடிப்பட்டி அருகே கட்டக்குளம் பிரிவில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் ரோட்டில் நடந்து சென்ற 70 வயது முதியவர் மீது ஒரு வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரிய வில்லை. வெள்ளை நிற வேட்டியும், பச்சை நிற சட்டையும், ஊதா நிற கால்சட்டையும் அணிந்து இருந்தார். இது குறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாஸ்மின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.